பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரி (தன்னாட்சி), தஞ்சாவூர். தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் ஆணைக்கிணங்க “உரக்கச் சொல்” என்ற செயலியை இன்று நமது கல்லூரியில் அறிமுகப்படுத்தினர். இந்த நிகழ்வு நமது கல்லூரியின் செயலாளர் திருமதி. புனிதா கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட காவல் ஆய்வாளர், தஞ்சை மருத்துவக்கல்லூரி துணை ஆய்வாளர், சைபர் கிரைம் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் இந்த செயலி மூலம் போதைப்பொருள், சூதாட்டம், கள்ளச்சாராயம், பொது இடத்தில் மது அருந்துதல், சட்டவிரோத மது விற்பனை, மணல் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு எவ்வாறு புகாரளிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்தனர். மேலும் கல்லூரி மாணவ மாணவிகள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டனர்.